easy registration just 60secs for registration
easy registration just 60secs for registration
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeSearchLatest imagesRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO

airtel Champions league t20 2010 daily updates with full news New_2910

 

 airtel Champions league t20 2010 daily updates with full news

Go down 
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

airtel Champions league t20 2010 daily updates with full news Empty
PostSubject: airtel Champions league t20 2010 daily updates with full news   airtel Champions league t20 2010 daily updates with full news EmptyTue Oct 05, 2010 2:32 pm

airtel Champions league t20 2010 daily updates with full news


]9 SEPTEMBER 2010-

10 அணிகள் பங்கேற்பு: சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்காவில் நாளை தொடக்கம் -

சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நடந்த இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூசவுத் வேல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 41 ரன்னில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அணியை வென்றது.

2-வது சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடத்தப் படுகிறது. இந்தப்போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 26-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த உள்ளூர் சாம்பியன் அணிகள் இதில் பங்கேற்கின்றன.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:-

குரூப்“ஏ”: சென்னை சூப்பர் கிங்ஸ் (ஏ1), வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா ஏ2), விக் டோரியா (ஆஸ்திரேலியா), வயம்பா (இலங்கை), சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் (நியூசிலாந்து)

குரூப் “பி”: மும்பை இந்தியன்ஸ் (பி1), லயன்ஸ் (தென்ஆப்பிரிக்கா பி2), சவுத்ஆஸ்திரேலியா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,கயானா (வெஸ்ட் இண்டீஸ்).

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அல்விரோ பீட்டர்சன் தலைமையிலான லயன்ஸ் அணியும் மோதுகின்றன. 22-ந் தேதியுடன் “லீக்” ஆட்டம் முடிகிறது. 24 மற்றும் 25-ந்தேதிகளில் அரை இறுதியும், 26-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

இந்தப்போட்டியில் டோனி, ஹைடன், மைக்கேல் ஹஸ்சி, அல்பி மார்கல், ரெய்னா (சென்னை), தெண்டுல்கர், பிராவோ, போலாட் (மும்பை), காலிஸ், ரோஸ் டெய்லர், கேமரூன் ஒயிட், உத்தப்பா (பெங்களூர்), சர்வான் (கயானா), மெக்கன்சி (லயன்ஸ்), டேவிட் ஹஸ்சி, பிரட் ஹோட்ஜே, (விக்டோரியா), மார்க் பவுச்சர், ஆஸ்வேல் பிரின்ஸ் (வாரியாஸ்) ஜெயவர்த்தனே (வயம்பா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

செஞ்சூரியன், டர்பன், போர்ட் எலிசபெத், ஜோகன்ஸ்பர்க் ஆகிய 4 மைதானங்களில் போட்டி நடக்கிறது.


10 SEPTEMBER 2010-

தென்னாப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலைமையேற்று நடத்தவுள்ள தெண்டுல்கர், போட்டி எங்கு நடக்கிறது என்பது முக்கியமில்லை, தரமான போட்டி எங்கு நடந்தாலும் அங்குச் சென்று திறமையை வெளிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இன்று (செப்.10ந் தேதி) தொடங்கி வரும் 26ந் தேதி வரை 2 வது சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.இன்று இரவு தொடங்கும் போட்டியில், தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்,அல்விரோ பீட்டர்சன் தலைமையிலான லயன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐ.பி.எல்.போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த உள்ளூர் சாம்பியன் அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேட்டிகள் செஞ்சூரியன், டர்பன், போர்ட் எலிசபெத், ஜோகன்ஸ்பர்க் ஆகிய 4 மைதானங்களில் நடக்கின்றன.

சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர்,“நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதலாக, இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். நான் கிரிக்கெட்டை மதிக்கிறேன். எங்கே சென்று விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. தரமான போட்டிகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்று திறமை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

மேலும், சாம்பியன்ஸ் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதை விட இந்தியாவுக்காக விளையாடுவது தனிச் சிறப்பு. மும்பையும், இந்தியாவும் இணையும் போது, மும்பை இந்தியன்ஸ் உருவாகிறது” என்று சச்சின் குறிப்பிட்டார்.


11 SEPTEMBER 2010-

சாம்பியன் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றனர். அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

“ஏ” பிரிவில் ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர்கிங்ஸ், வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), விக்டோரியா (ஆஸ்திரேலியா), வயம்பா (இலங்கை), சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் (நியூசிலாந்து) அணிகளும், “பி” பிரிவில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், லயன்ஸ் (தென்ஆப்பிரிக்கா) சவுத் ஆஸ்திரேலியா, கயானா (வெஸ்ட்இண்டீஸ்) ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்னில் லயன்ஸ் அணியிடம் தோற்றது. தெண்டுல்கர் 42 பந்தில் 69 ரன் எடுத்தும் (9 பவுண்டரி) பலன் இல்லை.

இன்று (சனிக்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டேவி ஜேக்கப் தலைமையிலான வாரியர்ஸ் அணியும், முபாரக் தலைமையிலான வயம்பா அணியும் மோதுகின்றன.

இரவு 9 மணிக்கு டர்பனில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ்- ஜேமி ஹவ் தலைமையிலான சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர்கிங்ஸ் வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

சென்னை அணியில் டோனி, ரெய்னா, ஹைடன், அல்பி மார்கல், மைக் ஹஸ்சி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போலிங்கா, முரளீதரன் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.



15 SEPTEMBER 2010-

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக சவுரப் திவாரி 25 பந்துகளில் 44 ரன் எடுத்தார்.

இதில் ஒரு பவுண்டரியும், 4 சிக்சரும் அடங்கும். அம்பத்தி ராயுடு 32 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய தெற்கு ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஹாரிஸ் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். கிங்ஜெர் 48 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சருன் 50 ரன் எடுத்தார்.

மும்பை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.


*


சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் முதல் லீக் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
÷புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையின் வயாம்பா அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
ஐ.பி.எல். சாம்பியனான சூப்பர் கிங்ஸ், சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
÷வலுவான பேட்டிங் வரிசை, பந்து வீச்சை பெற்றிருப்பது அந்த அணியின் பலம். கடந்த ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் ஹேடன், ரெய்னா ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
÷எனினும், அனிருத் ஸ்ரீகாந்த், பத்ரிநாத்தின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி பெற்றது. பாலாஜி, போலிங்கர், முரளீதரன், அஸ்வின் ஆகியோர் பந்து வீச்சுக்கு வலுசேர்ப்பவர்கள்.
சென்ற ஆட்டத்தில் பிராகாசிக்காத கேப்டன் தோனி, முரளி விஜய், மோர்கல் ஆகியோர் இந்த ஆட்டத்தில் தங்களது பேட்டிங்கால் அணிக்கு வலுசேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயாம்பா அணியை பொறுத்தவரை கேப்டன் ஜெயவர்த்தனே, வாரியர்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த நிலையில், சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முழு உத்வேகத்துடன் வயாம்பா அணி களமிறங்கும்.
÷மெண்டிஸ், பர்வீஸ் மெஹரூஃப், வெலகெதரா ஆகிய முன்னணி பந்து வீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணியை எதிர்கொள்கிறது.


16 SEPTEMBER 2010-

ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 57 ரன்னில் சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் (நியூசிலாந்து) அணியை வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது ஆட்டத்தில் வயம்பா அணியை (இலங்கை) எதிர் கொண்டது.

முதலில் விளையாடிய சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது. ரெய்னா 44 பந்தில் 87 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்) முரளிவிஜய் 46 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் ஆடிய வயம்பா அணி 17.1 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 97 ரன்னில் அபாரவெற்றி பெற்றது. ஆர்.அஸ்வின் 4 விக்கெட்டும், அல்பி மார்கல் 3 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்டநாயகனாக ரெய்னா தேர்வு பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றியாகும்.

இந்த வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இல்லை. இதனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பவில்லை. ஆனால் டாஸ் தோற்றதால் முதலில் பேட்டிங் செய்தோம்.

சுரேஷ் ரெய்னாவும், முரளி விஜய்யும் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. எக்ஸ்டரா மூலம் கூடுதலாக ரன்களும் கிடைத்தது.

200 ரன் என்பது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணி தனது 3-வது “லீக்” ஆட்டத்தில் விக்டோரியா அணியை வருகிற 18-ந்தேதி எதிர்கொள்கிறது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் விக்டோரியா அணி 7 விக்கெட்டில் சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை வென்றது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கயானா அணிகள் மோதுகின்றன. முதல் 2 ஆட்டத்தில் தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி மும்பைக்கு உள்ளது.


17 SEPTEMBER 2010-

கயானாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி-

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மேற்கிந்திய தீவுகளின் கயானா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் 10-வது லீக் ஆட்டம் டர்பனில் வியாழக்கிழமை நடந்தது. இதில் "பி' பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் கயானா அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மும்பை அணி. துவக்க ஆட்டக்காரர்களாக தவனும் டெண்டுல்கரும் களமிறங்கினர். டெண்டுல்கர் அபாரமாக ஆடி 39 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். 6 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிஷூவின் பந்து வீச்சில் ஸ்டெம்ப் முறையில் ஆட்டம் இழந்தார் டெண்டுல்கர். இதை அடுத்து பொல்லார்டு களம் இறங்கினார். அவருடன் விளையாடிய தவன் 39 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய திவாரி ரன் ஏதும் எடுக்காமலும் ராயுடு 4 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

பொல்லார்டு அதிரடியாக விளையாடினார். 9 சிக்ஸர்களை விளாசிய அவர் 30 பந்துகளில் 72 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டுமினி 14 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கியது கயானா அணி.

துவக்க ஆட்டக்காரர்களாக டௌலினும் சாட்டர்கூனும் களமிறங்கினர். டௌலின் 7 ரன்களுக்கும் சாட்டர்கூன் 1 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய சர்வான் 46 ரன்களுக்கும், தியோநரைன் 27 ரன்களுக்கும், பார்ன்வெல் 24 ரன்களுக்கும், ஃப்ன் 1 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். ஆர்.டி. கிராண்டன் 14 ரன்னுடனும் ஈ.ஏ. கிராண்டன் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கயானா அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

அதிரடி ஆட்டத்தின் மூலம் அபாரமாக விளையாடி 72 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இந்த போட்டியில் தனது வெற்றி கணக்கை துவக்கி உள்ளது. ஏற்கெனவே நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் ஒன்றில் லயன்ஸ் அணியிடமும் மற்றொன்றில் தெற்கு ஆஸ்திரேலியாவிடமும் சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்பை இழந்தது மும்பை அணி. இந்த போட்டிகளில் கயானா அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். ஏற்கெனவே நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது கயானா.


*


பெங்களூருக்கு 2-வது வெற்றி கிடைக்குமா? தெற்கு ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்-

சாம்பியன் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த அணி முதல் ஆட்டத்தில் கயானா அணியை தோற்கடித்தது. இன்று டர்பன் நகரில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா அணியும் மோதுகிறது.

இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் 2-வது வெற்றியுடன் 4 புள்ளிகளை பெற்று விடும். ஆனால் தெற்கு ஆஸ்திரேலியா வலுவான அணியாக உள்ளது. அந்த அணி ஏற்கனவே 2 போட்டிகளில் ஆடி இரண்டிலுமே வெற்றி பெற்று உள்ளது. எனவே அதை வெற்றி பெற வேண்டுமானால் பெங்களூர் அணி கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.


18 SEPTEMBER 2010-

சாம்பியன் “லீக்” கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் “ஹாட்ரிக்” வெற்றி பெறுமா?- விக்டோரியாவுடன் இன்று மோதல்-

ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சவுத் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது.

முதலில் ஆடிய பெங்களூர் அணி 19.5 ஓவரில் 154 ரன்னில் “ஆல் அவுட்” ஆனது. டிபிரீஸ் 25 பந்தில் 46 ரன்னும், ரோஸ் டெய்லர் 28 பந்தில் 46 ரன்னும் எடுத்தனர். கிறிஸ்டியன் 4 விக்கெட்டும், டயட், புட்லேண்டு தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய சவுத் ஆஸ்திரேலிய 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. சிலிங்கர் 57 பந்தில் 69 ரன்னும், ஹாரிஸ் 38 பந்தில் 57 ரன்னும் எடுத்தனர். இது சவுத் ஆஸ்திரேலியா பெற்ற 3-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றது. பெங்களூர் அணி முதல் தோல்வியை சந்தித்தது.

ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ளது. டோனி தலைமையிலான அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 57 ரன்னில் சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் 97 ரன்னில் வயம்பா அணியையும் தோற்கடித்தது.

3-வது லீக் ஆட்டத்தில் விக்டோரியா அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் “ஹாட்ரிக்” வெற்றியை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னா, விஜய் ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலத்தை ஏற்படுத்தி உள்ளது.

விக்டோரியா அணி 2 ஆட்டத்தில் விளையாடி, ஒன்றில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தோற்றது. வாரியர்ஸ் அணியிடம் தோற்றது. சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை வென்று இருந்தது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் கிங்ஸ் அரை இறுதி வாய்ப்பை பெறும்.

இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ்- வாரியர்ஸ் (“ஏ” பிரிவு) அணிகள் மோதுகின்றன. வாரி யர்ஸ் அணி ஏற்கனவே 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. “ஹாட்ரிக்” வெற்றி வாய்ப்பில் அந்த அணி உள்ளது.

சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.


*


அரைஇறுதியில் தெற்கு ஆஸ்திரேலியா-

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. தெற்கு ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

÷டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் டெய்லர், பிரீஸ் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆடிய தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு ஹாரிஸ், கிளிங்கர் சிறப்பான தொடக்கத்தை ஏற்பத்தினர். ஹாரிஸ் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தெற்கு ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. கிளிங்கர் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கிளிங்கர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.



இன்றைய ஆட்டங்கள்

சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்- வாரியர்ஸ்.

இடம்: போர்ட் எலிசபெத். நேரம்: மாலை 5 மணி.

சென்னை சூப்பர் கிங்ஸ்-விக்டோரியா.

இடம்: போர்ட் எலிசபெத்.நேரம்: இரவு 9 மணி.

ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட் சேனல்.


18 SEPTEMBER 2010-

சூப்பர் ஓவரில் அஸ்வின் வீசியது டோனியின் தவறான முடிவால்; சூப்பர் கிங்சுக்கு தோல்வி-

சாம்பியன் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ளது. விக்டோரியா (அஸ்திரேலியா), வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), வயம்பா (இலங்கை), சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் (நியூசிலாந்து) ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் 5 ரன்னில் சென்டிரல் டிஸ்டி ரிக்ட்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் 97 ரன் னில் வயம்பாவையும் தோற்கடித்தது. 3-வது “லீக்” ஆட்டத்தில் விக்டோரியா அணியை நேற்று எதிர் கொண்டது.

முதலில் விளையாடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. முரளி விஜய் 53 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 73 ரன் எடுத்தார்.

பின்னர் ஆடிய விக்டோரியா ஆட்டத்தின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன் எடுத்தது. இதனால் ஆட்டம் “டை”ஆனது.

கடைசி ஓவரில் விக்டோரியாவுக்கு 12 ரன் தேவைப்பட்டது. 2-வது, 3-வது பந்தில் ரெய்னா அடுத்தடுத்து விக்கெட் கைப்பற்றினார். ஆனால் விக்டோரியா ரன்னை சமன் செய்வதை அவரால் தடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் கடைசி விக்கெட் ரன் அவுட் செய்யப்பட்டது.

கேப்டன் டேவிட் ஹஸ்சி 45 பந்தில் 51 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 17 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

ஆட்டம் “டை” ஆனதால் வெற்றி- தோல்வியை முடிவு செய்ய “சூப்பர் ஓவர்” கடை பிடிக்கப்பட்டது. விக்டோரியா முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் ஹஸ்சியும், ஆரோன் பிஞ்சும் ஆடினார்கள். அஸ்வின் வீசிய சூப்பர் ஓவரில் 23 ரன் எடுக்கப்பட்டது. இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.

பின்னர் சென்னை அணி ஆடியது. ரெய்னாவும், விஜய்யும் களம் இறங்கினார்கள். மெக்காய் வீசிய சூப்பர் ஓவரில் (6 பந்து) 13 ரன்னே அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால் சூப்பர் கிங்ஸ் 10 ரன்னில் தோற்றது.

கேப்டன் டோனியின் தவறான முடிவால் தான் சூப்பர் ஓவரில் தோல்வி ஏற்பட்டது. அஸ்வினை சூப்பர் ஓவரில் வீச வைத்தது மிகவும் தவறான முடிவு. வேகப்பந்து வீரர் போலிஞ்சரை வீச சொல்லி இருக்கலாம்.

மேலும் அஸ்வினை விட முரளீதரன் சிறப்பாக வீசி இருந்தார். அவர் 4 ஓவரில் 17 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

ஆனால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டோனி இதை நியாயப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அஸ்வின் சிறந்த பவுலர் தான். பல்வேறு கட்டங்களில் நன்றாக வீசியுள்ளார். எனவே வேகப்பந்து வீரர்களை விட அவர் சிறப்பாக வீசுவார் என்று கருதினேன்.

சூப்பர் ஓவரில் அவரை வீச அழைத்த முடிவு சரியானது தான். எங்களது சுழற்பந்து வீச்சு நன்றாக இருந்தது. ரெய்னா அருமையாக வீசினார்.

விக்டோரியா அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக அமைந்தது. அவர்கள் நன்றாக ஆடினார்கள். வெற்றி விளிம்பு வரை சென்று தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி “லீக்” ஆட்டத்தில் வாரியர்ஸ் அணியை வருகிற 22-ந்தேதி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதி வாய்ப்பை பெற இயலும்.

விக்டோரியா 2-வது வெற்றியை பெற்றது. 4 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வயம்பா அணியை நாளை எதிர்கொள்கிறது.

இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வாரியர்ஸ் 6 விக்கெட்டில் சென்டிரல் அணியை தோற்கடித்தது. வாரியர்ஸ் 3-வது வெற்றியை பெற்று அரை இறுதி வாய்ப்பில் உள்ளது.

21 SEPTEMBER 2010-

சாம்பியன் “லீக்” கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வாரியர்சுடன் இன்று மோதல்-

சாம்பியன் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். “லீக்” முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

“பி” பிரிவில் கடைசி “லீக்” ஆட்டங்கள் நேற்று நடந்தது. முதலில் நடந்த ஆட்டத்தில் சவுத் ஆஸ்திரேலியா 15 ரன்னில் கயானா அணியை வீழ்த்தியது. தான் மோதிய 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று சவுத் ஆஸ்திரேலியா “பி” பிரிவில் முதலிடத்தை பிடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் லயன்ஸ் அணியை தோற்கடித்தது. முதலில் ஆடிய லயன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் பீட்டர்சன் 29 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) மெக்கன்சி 35 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. வீரட் கோக்லி 29 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), பாண்டே 36 பந்தில் 44 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), டிராவிட் 26 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர்.

“லீக்” முடிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றன. இதில் ரன்ரேட்டில் பெங்களூர் அணி முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன்ரேட் +0.759 ஆகும். லயன்ஸ் ரன்ரேட் +0.401 ஆகும். மும்பை இந்தியன்ஸ் ரன்ரேட் +0.211 ஆகும்.

முதல் 2 இடங்களை பிடித்த சவுத் ஆஸ்திரேலியா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுததி பெற்றன. லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், கயானா அணிகள் வெளியேற்றப்பட்டன.

“ஏ” பிரிவில் கடைசி “லீக்” ஆட்டங்கள் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ்-வயம்பா அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே வாய்ப்பை இழந்துவிட்டதால் போட்டியின் முடிவால் எந்த பாதிப்பும் இருக்காது ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் போராடும்.

இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னைக்கு உள்ளது. இதில் வென்றால் தான் அரை இறுதி வாய்ப்பை பெற முடியும்.

சென்னை அணி வெற்றி பெற்றால் வாரியர்ஸ், சென்னை, விக்டோரியா ஆகிய 3 அணிகளும் தலா 6 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் சென்னை அணி ரன்ரேட் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் கண்டிப்பாக வெற்றி மட்டும் பெற வேண்டும்.

வாரியர்ஸ் அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படுத்த வேண்டும்.


24 SEPTEMBER 2010-

சாம்பியன் லீக் அரை இறுதி போட்டி: சென்னை அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்போம்; பெங்களூர் கேப்டன் கும்ப்ளே உறுதி-

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வந்த சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், தெற்கு ஆஸ்தி ரேலியா, வாரியர்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

இன்று முதல் அரை இறுதி போட்டி டர்பன் நகரில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

போட்டி குறித்து பெங்களூர் அணி கேப்டன் கும்ப்ளே கூறியதாவது:-

சென்னை அணி பலம் வாய்ந்த அணியாகும். ஆனாலும் அந்த அணிக்கு நாங்கள் கடும் சவாலாக இருப்போம். சென்னை அணியுடன் நாங்கள் பல தடவை மோதியுள்ளோம். அந்த அணியின் பலம், பலவீனம் அனைத்தையும் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.

இதுவரை நடந்த போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறோம். டர்பன் மைதானம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும். எங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


25 SEPTEMBER 2010-

தெற்கு ஆஸ்திரேலியா - வாரியர்ஸ் இன்று மோதல்-

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் ரெட்பேக்ஸ்- தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தத் தொடரில் தான் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் ரெட்பேக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. வாரியர்ஸ் அணி முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றியும், சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியும் அடைந்தது. ரெட்பேக்ஸ் அணியில் கேப்டன் கிளிங்கர் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறார். தான் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் 213 ரன்கள் குவித்துள்ளார் அவர். சராசரி 71 ரன்கள்.

ஃபெர்குசன், போர்கஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பக்க பலமாக உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்தவரை ஷான் டெய்ட் வாரியர்ஸ் வீரர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும்.

வாரியர்ஸ்: வாரியர்ஸ் அணியும் சளைத்ததல்ல. பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் வாரியர்ஸ் அணியும் சிறந்து விளங்குகிறது. தொடக்க வீரர்களான கேப்டன் ஜேக்கப்ஸ், பிரின்ஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இந்த போட்டியில் இதுவரை ஜேக்கப்ஸ் 191 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்கெட் கீப்பர் மார்க் பெüச்சரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நிதினி, சோட்சோப் ஆகியோரின் வேகப் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு ரெட்பேக்ஸ் அணியினர் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். சுழற் பந்து வீச்சில் போத்தா, நிக்கி போஜ் ஆகிய அனுபவ வீரர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும்.

மொத்தத்தில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் ஆட்டமாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.



Last edited by SCOUTBOY on Tue Oct 05, 2010 2:36 pm; edited 1 time in total
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

airtel Champions league t20 2010 daily updates with full news Empty
PostSubject: Re: airtel Champions league t20 2010 daily updates with full news   airtel Champions league t20 2010 daily updates with full news EmptyTue Oct 05, 2010 2:35 pm

பெங்களூரை வீழ்த்தியது சென்னை: ரெய்னா (94*)-

டர்பன், செப். 25: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்தது.

ஆட்டத்தின் இடையே மழைக் குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ரெய்னா, முரளி விஜய் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தாலும், போலிங்கரின் சிறப்பான பந்து வீச்சாலும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது சென்னை அணி.

சென்னை அணியில் ஹசி, முரளி விஜய் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஹசி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த விஜய், ரெய்னா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். 29 பந்துகளை மட்டுமே சந்தித்து அரை சதமடித்தார் ரெய்னா. இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

32 பந்துகளில் ஒரு சிக்ஸர், நான்கு பவுண்டரியுடன் 41 ரன்கள் குவித்தார் விஜய். இருவரின் அதிரடி ஆட்டத்தால் 11.4வது ஓவரிலேயே 100 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

வினய் குமார் வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் விஜய்.அடுத்து வந்த தோனி 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் மோர்கல். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரெய்னா, 42 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார்.

அவரை ஆட்டமிழக்கச் செய்ய கும்ப்ளே, வினய் குமார், பிரவீண் குமார், ஒயிட் என அனைத்து பந்து வீச்சாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. மோர்கல் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது சென்னை அணி. ரெய்னா 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 94 (48) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடினமான இலக்கு: 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி.

எனினும், தொடக்கமே அந்த அணிக்கு சோதனையாக அமைந்தது. அணியின் ஸ்கோர் 2ஆக இருந்தபோது, திராவிட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த உத்தப்பா, டெய்லர் ஆகியோர் தலா 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

விராட் கோலி 14 ரன்களும், ஒயிட் 13 ரன்களும் எடுத்தனர்.

பாண்டே அசத்தல்: அந்த அணியில் பாண்டே மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன் குவித்தார். தொடக்க வீரராக களமிறங்கிய பாண்டே 44 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெங்களூர் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 123 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சென்னை அணி தரப்பில் போலிங்கர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்த ரெய்னா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


26 SEPTEMBER 2010-

இறுதி ஆட்டத்தில் சென்னை- வாரியர்ஸ் மோதல்-

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ்.

சனிக்கிழமை நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வாரியஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் ரெட்பேக்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் செஞ்சுரியனில் சனிக்கிழமை நடந்தது. முதலில் பேட் செய்த வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ரெட்பேக்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

வாரியர்ஸ் கேப்டன் ஜேக்கப்ஸ் 61 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியில் ஜேக்கப்ஸ், பிரின்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

டெய்ட் வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் பிரின்ஸ். அடுத்து களமிறங்கிய இங்ராம், ஜேக்கப்ஸýடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

41 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து ஜேக்கப்ஸ் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இங்ராம்- ஜேக்கப்ஸ் இணை 104 ரன்கள் குவித்தது.

ஜேக்கப்ûஸத் தொடர்ந்து இங்ராமும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் பெüச்சர் 25 ரன்களும், நிக்கி போஜ் 22 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது வாரியர்ஸ்.

ரெட்பேக்ஸ் அணியினர் கோட்டை விட்ட பல கேட்சுகள் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தடுமாற்றம்: அடுத்து களமிறங்கிய ரெட்பேக்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஹாரிஸ், கேப்டன் கிளிங்கர் ஆகியோர் முறையே 8, 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பெர்குசன் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். 49 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 71 ரன்களை அவர் குவித்தார்.

கிறிஸ்டைன் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி ஓவரில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரெட்பேக்ஸ் அணியால் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தது வாரியர்ஸ் அணி. அந்த அணியின் ஜேக்கப்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரவு 9 மணிக்கு தொடங்கும் இறுதி ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் அலைவரிசை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


27 SEPTEMBER 2010-

சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்-

ஜோகன்னஸ்பர்க், செப்.26: சாம்பியன்ஸ் லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது ஐ.பி.எல். சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் பேட் செய்த வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முரளீதரன், அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வாரியர்ஸ் அணியின் ரன் உயர்வை கட்டுப்படுத்தினர்.

முரளி விஜய், ஹசி ஆகியோர் அரைசதங்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடி தந்தனர். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்காக "தங்க பேட்' விருதை தட்டிச் சென்றார் முரளி விஜய்.

பந்து வீச்சு, பீல்டிங் என இரண்டிலும் தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் முத்திரைப் பதித்தனர்.

வாரியர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ஜேக்கப்ஸ், பிரின்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார் ஜேக்கப்ஸ். மோர்கல் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளுடன் பத்து ரன்கள் எடுத்தது வாரியர்ஸ் அணி.

போலிங்கர், மோர்கல் பந்துகளை பவுண்டரிகளாக விரட்டி அடித்தார் ஜேக்கப்ஸ். பிரின்ஸ் 6 ரன்கள் எடுத்திருந்தபோது போலிங்கர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், அஸ்வினை பந்து வீச அழைத்தார் கேப்டன் தோனி. இந்தத் தொடர் முழுவதுமே பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜேக்கப்ஸ், அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆகி வெளியேறினார்.

21 பந்துகளை சந்தித்த ஜேக்கப்ஸ் 8 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்தார். இங்ராம் 16 ரன்கள் எடுத்தார். 14வது ஓவரில் பெüச்சர், கிரெயூஸ்ச் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார் முரளீதரன்.

அடுத்து வந்தவர்களில் தைசென் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 25 ரன்கள் எடுத்திருந்தபோது முரளீதரன் வீசிய பந்தில் அனிருத்திடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முரளீதரன். அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது வாரியர்ஸ் அணி.

விஜய், ஹசி அசத்தல்: அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் முரளி விஜய், மைக் ஹசி இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தால் இறுதி ஆட்டத்திலும் அரை சதமடித்தார் விஜய். ஹசி- விஜய் இணை முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது.

53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்தார் விஜய். போயே பந்து வீச்சில் கிரெயூஸ்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த தோனி அதிரடியாக விளையாடினார்.

ஆட்டத்தின் 19வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார் தோனி. இதையடுத்து ஒரு ஓவர் மீதமிருக்கையில் 132 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஹசி 46 பந்துகளில் 51 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விருதுகள்

தங்க பேட், ஆட்ட நாயகன் ஆகிய இரு விருதுகளை பெற்றார் முரளி விஜய்.

தொடர் நாயன் விருது 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. தங்கப் பந்து விருதையும் அவர் வென்றார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வென்றதன் மூலம் | 11 கோடியை பரிசாகப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.


CHENNAI SUPER KINGS ROCKS
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

airtel Champions league t20 2010 daily updates with full news Empty
PostSubject: Re: airtel Champions league t20 2010 daily updates with full news   airtel Champions league t20 2010 daily updates with full news EmptyTue Oct 05, 2010 2:37 pm

chennai super kings rocks
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
Sponsored content





airtel Champions league t20 2010 daily updates with full news Empty
PostSubject: Re: airtel Champions league t20 2010 daily updates with full news   airtel Champions league t20 2010 daily updates with full news Empty

Back to top Go down
 
airtel Champions league t20 2010 daily updates with full news
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» AIRTEL CHAMPIONS LEAGUE T20 2010 HIGHLIGHTS | ALL THE MATCHES | HD-QUALITY
» A.R.Rahman Tamil Audios | Full Collection | 71 Films (1992 - 2010)
» MADHARASAPATTINAM(2010)FULL BGMS AND RINGTONES AT 320 KBPS(first on net)by SCOUTBOY WITH 5 DOWNLOAD LINKS
» Yuvan Shankar Raja Tamil Audios | Full Collection (1997-2010)
» ENDHIRAN(2010)FULL BGMS AND DIALOGUES AND RINGTONES AT 320 KBPS(first on net)by SCOUTBOY WITH 5 DOWNLOAD LINKS

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: SPORTS-
Jump to: