easy registration just 60secs for registration
easy registration just 60secs for registration
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeSearchLatest imagesRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO

தெரிந்து கொள்ளுங்கள்... சிறந்த ஆல்ரவுண்டர் New_2910

 

 தெரிந்து கொள்ளுங்கள்... சிறந்த ஆல்ரவுண்டர்

Go down 
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

தெரிந்து கொள்ளுங்கள்... சிறந்த ஆல்ரவுண்டர் Empty
PostSubject: தெரிந்து கொள்ளுங்கள்... சிறந்த ஆல்ரவுண்டர்   தெரிந்து கொள்ளுங்கள்... சிறந்த ஆல்ரவுண்டர் EmptyFri Dec 03, 2010 2:38 pm

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்ந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்.

÷ராபின் சிங் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கும் வருவது அவரது துடிப்பான பீல்டிங், அதிரடி பேட்டிங், அதிகவேக ஓட்டம்தான்.

÷இவர் 1963-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் பிறந்தார். பிறந்தது மேற்கிந்தியத் தீவுகள் என்றாலும், விளையாடியது இந்திய அணிக்குத்தான். 1989-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் ஆட்டத்தில் முதன்முறையாக களம் கண்டார்.

÷அதன்பிறகு இந்திய அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சுமார் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார்.

÷அணியில் விளையாடிய காலங்களில் பேட்டிங், பெüலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகத் திகழ்ந்தார். இந்தியாவின் ஜான்டிரோட்ஸ் என இந்திய ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். கடினமாக கேட்சுகளை பிடிப்பதில் மட்டுமின்றி, விக்கெட்டுகளுக்கிடையில் ரன் சேர்ப்பதில் மின்னல் வேகத்தில் செயல்படக்கூடியவர்.

÷1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இவரின் பேட்டிங் திறமை அனைவரையும் கவர்ந்தது. அதன் பிறகு பல்வேறு போட்டிகளில் விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர்.

÷136 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர், ஒரு சதம் உள்பட 2,336 ரன்களையும், 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 22 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

÷சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் ஓய்வுபெற்றார். பின்னர் சில காலம் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இப்போது சென்னை அடையாறில் வசித்து வருகிறார்.
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
 
தெரிந்து கொள்ளுங்கள்... சிறந்த ஆல்ரவுண்டர்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: SPORTS-
Jump to: