காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் இந்தியா 101 பதக்கம் குவித்தது.பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக “டுவிட்டர்” இணைய தளத்தில் அவர் கூறியதாவது:-
காமன்வெல்த்தில் 101 பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கம் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் கடுமையாக உழைத்து பல்வேறு தியாகங்களையும் செய்து நாட்டுக்காக வெற்றி சின்னமாய் இருக்கிறீர்கள். நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.