easy registration just 60secs for registration
easy registration just 60secs for registration
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeSearchLatest imagesRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா New_2910

 

 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Go down 
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா Empty
PostSubject: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா   தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா EmptyFri Dec 03, 2010 2:39 pm

இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் குஜராத் மாநிலம் வடோதராவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

÷இந்த ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

÷5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களை இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 3-வது ஆட்டத்தையும் வென்று தொடரைக் கைப்பற்ற கம்பீர் தலைமையிலான இளம் இந்திய அணி போராடும்.

÷அதேசமயம் முதல் வெற்றியைப் பதிவு செய்ய நியூசிலாந்து அணியும் கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

÷இந்தியாவைப் பொறுத்தவரையில் முன்னணி வீரர்கள் டெண்டுல்கர், தோனி, சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியில் இடம்பெறாத நிலையில், ஜாகிர்கான் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலம்.

÷பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் கம்பீர், கோலி, யுவராஜ், முரளி விஜய், யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

÷கடந்த சில ஆட்டங்களில் பெரிய அளவில் ரன் குவிக்காத முரளி விஜய் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக களமிறங்கவுள்ள இளம் வீரர் சௌரவ் திவாரி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.÷

பெüலிங்கில் ஜாகிர்கான், முனாப் பட்டேல், பிரவீண் குமார், அஸ்வின், யூசுப் பதான் ஆகியோர் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று தெரிகிறது.

÷இந்திய அணி இந்தத் தொடரை வென்றால் அடுத்து நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க தொடர், உலகக்கோப்பை போட்டிகளுக்கு இது நம்பிக்கையளிப்பதாக அமையும்.

÷இந்திய அணி முதல் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

÷நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பிரண்டன் மெக்கல்லம் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது. பேட்டிங்கில் குப்தில், ஸ்டைரில், டெய்லர் வெட்டோரி ஆகியோரை நம்பியே அந்த அணி களமிறங்குகிறது. பௌலிங்கில் வெட்டோரி, மில்ஸ் ஆகியோரை நம்பியே களமிறங்குகிறது.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்தித்துள்ளது நியூசிலாந்து. அதனால் இந்த ஆட்டத்தில் வென்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்த அணி போராடும்.

இந்திய அணி: கௌதம் கம்பீர் (கேப்டன்), முரளி விஜய், விராட் கோலி, யுவராஜ் சிங், செüரவ் திவாரி, யூசுப் பதான், ரித்திமான் சாஹா, அஸ்வின், ஜாகிர்கான், ஆசிஷ் நெஹ்ரா, பிரவீண் குமார், முனாப் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, வினய் குமார்.

நியூசிலாந்து அணி:

டேனியல் வெட்டோரி (கேப்டன்), மார்டின் குப்தில், பிரண்டன் மெக்கல்லம், ஜேமி ஹவ், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஸ்காட் ஸ்டைரிஸ், ஹாப்கின்ஸ், நாதன் மெக்கல்லம், கெய்லே மில்ஸ், டிம் சௌத்தி, ஆன்டி மெக்கே, ஜேம்ஸ் பிராங்க்ளின், கிராண்ட் எல்லியட்.

நேரம்: காலை 9 மணி.

நேரடி ஒளிபரப்பு:

நியோ ஸ்போர்ட்ஸ்.
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
 
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இந்தியா-நியூசீலாந்து டெஸ்ட்
» கிரிக்கெட்: இந்தியா த்ரில் வெற்றி
» மொகாலி டெஸ்ட்: இந்தியா 4 விக்கெட் இழந்து 55 ரன்
» 2010 காமன்வெல்த் போட்டி: பதக்க வேட்கையில் இந்தியா!
» முதல் இன்னிங்ஸில் இந்தியா 405 ஓட்டங்கள்! - சச்சின் 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: SPORTS-
Jump to: