அகமாதாபாதில் நாளை இந்திய - நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்ச்யியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பீர் அணியில் மீண்டும் இடம்பெற்றிருப்பதால் பெங்களூர் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த தமிழக வீரர் விஜய் விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போல் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகக் கலக்கிய புஜாரா விளையாடுவதும் சந்தேகம் ஏனெனில் லஷ்மண் முழு உடல் தகுதி பெற்றுள்ளார்.
இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். சச்சின் டெண்டுல்கர் 50 சதங்களை எடுக்க இன்னும் ஒரு சதம் பாக்கி இருப்பதால் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் அந்தச் சாதனையை நிறைவேற்ற ஆவலாயிருப்பார்.
நியூஸீலாந்து அணியில் டெய்லர், பிரெண்டன் மெக்கல்லம், கப்தில், ஜெஸ்சி ரைடர் ஆகிய பேட்ஸ்மென்களுடன் ஆல்ரவுண்டர் வெட்டோரியும், பந்து வீச்சில் கிறிஸ் மார்டினும் உள்ளனர்.
ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்குத் துவங்குகிறது.
அணி விவரம்:
இந்தியா:- தோனி (கேப்டன்), சேவாக், கம்பீர், டிராவிட், தெண்டுல்கர், லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஒஜா, ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, முரளி விஜய், புஜாரா, அமித் மிஸ்ரா.
நியூசிலாந்து:- வெட்டோரி (கேப்டன்), ரோஸ் டெய்லர், ரைடர், மேக்குல்லம், குப்தில், ஹோப்கின்ஸ், வில்லியம்சன், வாட்லிங், சவுத்தி, மார்ட்டின், ஜித்தன் பட்டேல், மெக்காய், மெக்ளின் டோஷ், பென்னட், ஆர்னெல்.